ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Sakthi

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இது என சொல்லப்படுகிறது.தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பல தலைவர்களும், முதலமைச்சர்களும் பரிசுகளை அறிவித்து வருகிறார்கள். அதோடு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்ட பல தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அரியானா மாநிலத்தில் பானு பட்டியில் நடந்த பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்ட நேரத்திற்கு திடீரென்று உடல் நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, உடனடியாக அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து உடனடியாக அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் நீரஜ் சோப்ரா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்கட்ட தகவலின் அடிப்படையில் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது.