நீட்  ஜேஇஇ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் ! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Photo of author

By Pavithra

நீட், ஜே இஇ தேர்வுகள் அடுத்த மாதம்  திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கு  நுழைவுத் தேர்வான நீட்  செப்டம்பர் 13-ஆம் தேதியும், பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வாக ஜே இஇ தேர்வுகள் செப்டம்பர்  1 முதல் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்தம் நீட் தேர்விற்கு 15, 97,000 மாணவர்களும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 மாணவர்களும் தேர்வு  எழுதுவதற்காக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையும், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து தரக்கோரி கடிதம் எழுதபட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.