முதல்வர் வேட்பாளராக விஜய்யும் இல்லை இபிஎஸ்யும் இல்லை.. பாஜக எடுத்த அசத்தலான முடிவு!!

0
782
Neither Vijay nor EPS as chief ministerial candidate.. Amazing decision taken by BJP!!
Neither Vijay nor EPS as chief ministerial candidate.. Amazing decision taken by BJP!!

ADMK BJP TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த போதே கூட்டணி அமைக்கப்படும், ஆனால் அந்த கூட்டணி எங்களின் தலைமையில் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தன்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துக் கொண்டார். இந்த சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வு தான் கரூர் சம்பவம். இது நிகழ்ந்து 1 மாதம் ஆன நிலையில், விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஆனாலும் விஜய்யின் குரலாக ஒளித்து வருகிறது அதிமுக-பாஜக. அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறி அதிமுக-விஜய் கூட்டணியை உறுதிப்படுத்தி இருந்தார். விஜய் முதல்வர் வேட்பாளராக விருப்பப்படும் சமயத்தில், இதனை ஏற்காத இபிஎஸ் துணை முதல்வர் பதவியை வழங்குவதாக கூறியிருக்கிறார். யார் முதல்வர் வேட்பாளர் என்று இன்னும் முடிவாகாத நிலையில், கூட்டணி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனால் அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜக ஒரு திட்டத்தை தீட்டி இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. அதிமுக மற்றும் தவெக இரண்டு கட்சிகளின் ஆதரவும் இருந்தால் தான் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியும். இதனால் பாஜக தலைமை இபிஎஸ், விஜய் இருவருக்குமே முதல்வர் பதவியை வழங்காமல், தமிழகத்தில் நல்ல அரசியல் அனுபவம் உள்ள, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

Previous articleபாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயக்குமார்.. மாற்றம் காணும் தேர்தல் களம்!!
Next articleமீண்டும் ஒர்க் ப்ரம் ஹோம் தலைவராக மாறிய விஜய்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!