தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது.
அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசியிருக்கிறார்.
விஜய் நிறைய பேசுவார். குறிப்பாக ஆளும் கட்சியை விமர்சித்து நிறைய பேசுவார் என அங்கு கூடியிருந்த தவெக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவரோ 4.30 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு ‘நன்றி வணக்கம்’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இதனால் அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து. இப்பலாம் சினிமே பாட்டே 5லிருந்து 6 நிமிஷம் வரை இருக்கு. இவர் இவ்வளவு கம்மியாவா பேசுவாரு!. என சமூகவலைத்தளங்களில் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.