DMK TVK: கரூர் விவகாரத்தில் திமுகவையும், தவெகவையும் மாறி மாறி குறை கூறி வந்த சமயத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை அறிய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத தவெக தரப்பு சிபியை விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
பிறகு தமிழக அரசு அமைத்த தனி நபர் குழுவின் மேல் நம்பிக்கை இல்லதா பாஜக அரசு, பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழு திமுக அரசின் மேலுள்ள தவறை சாட்சியத்துடன் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து விட்டு இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரளவு என்று கூறியதோடு, விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லையென்றும் கூறியது.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக இன்னும் 3 மாதத்தில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று, தனி நபர் குழுவுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.
3 மாத காலம் என்பது மிகவும் சிறியது என்றும், தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதற்குள் கரூர் சம்பவத்தில் விஜய் மீது தவறு உள்ளது என்பதை நிரூபித்து விஜய் வாக்குகளை தான் பக்கம் இழுக்கும் முயற்சியாக இது உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் விஜய் மீது தவறுள்ளது என்று திமுக அரசு முடிவேடுத்த பின்பு தான் இந்த விசாரணையை தொடங்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.