திரைப்படங்களுக்கு புதிய 5 வகை தணிக்கை சான்றிதழ்கள் கட்டாயம்!! அதிரடி மாற்றங்கள்!!

Photo of author

By Jeevitha

Cinema Update: திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் மத்திய அரசு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதில் U, A, மற்றும் U/A ஆகிய மூன்று வகைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த தணிக்கை சான்றிதழ்களை மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் வழங்குகிறது.

இந்த U வகை தணிக்கை சான்றிதழ் என்பது அனைத்து வகையான பார்வையாளர்களும் திரைப்படங்களை பார்க்கலாம் என்பது ஆகும். U/A சான்றிதழ் என்பது குழந்தைகள் தங்களின் பெற்றோர்களுடன் பார்க்க வேண்டிய படங்கள் ஆகும். அதில் A வகை தணிக்கை சான்றிதழ் என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க கூடாது. இந்த மூன்று தணிக்கை சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

அந்த நிலையில் இப்போது A, U, U/A 7+, U/A 13+, U/A 16+ என்ற 5 வகை தணிக்கை சான்றிதழ்கள் பெற வேண்டும் என கூறப்படுகிறது. இதில் U/A 7+ என்ற தணிக்கை சான்றிதழ்கள் மூலம் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்காலம், U/A 13+ வகை தணிக்கை சான்றிதழ்கள் மூலம் 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் U/A 16+ தணிக்கை சான்றிதழ்கள் மூலம் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என இந்த திட்டம் அறிமுகமாகி உள்ளது.