ADMK BJP: முன்னாள் பாஜக தலைவரான அண்ணாமலை தலைமை பதவி பறிக்கப்படத்திலிருந்தே பாஜக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் என்றும் கூறினார்.
டிடிவி தினகரனை தொடர்ந்து ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த சந்திப்பு பாஜக மேலிடத்தின் உத்தரவா இல்லை இபிஎஸ், நயினார்க்கு எதிரான சதி திட்டமான என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இபிஎஸ் NDA கூட்டணியில் இணையும் முன்பு அண்ணாமலையை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தான் இணைந்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளும் அண்ணாமலைக்கு எதிராகவே உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. டிடிவி தினகரன், நாங்கள் NDA கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் என்றும், கட்சியில் அனைவருக்கும் சம உரிமை கொடுக்காமல் இபிஎஸ் பேச்சை மட்டும் நயினார் கேட்டு நடப்பதாகவும் கூறினார். ஓபிஎஸ்-யிடமும் இந்த கருத்தே தென்பட்டது.
மேலும் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கும், சிறிது நாட்களாகவே பாஜகவில் தனது வலிமை குறைந்து வருவதற்கும் இபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றுணர்ந்த அண்ணாமலை இவ்வாறு செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் நயினார்க்கு எதிராக உள்ளவர்களையும், அதிமுக மேல் அதிருப்தியில் உள்ளவர்களை மட்டுமே அண்ணாமலை சந்தித்து இபிஎஸ், நயினாரை வீழ்த்த முயற்சி செய்து வருவதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.