A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிக பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது பல்வேறு சிக்கல்களையும், உட்கட்சி பிளவுகளையும் சந்தித்து வருகிறது. இது நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக-விற்கு பாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆனாலும் மற்ற கட்சிகளை போலவே தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கும் அதிமுக கடந்த 1 வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணியை அமைத்துவிட்டது. இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில், பாஜக கூட்டணியில் இருந்து டி.டி.வி தினகரன் விலகி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த கூடாது என்று கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தினர்.
இதனால் அதிமுக-வில் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அக்கட்சியுடன் யார் கூட்டணியில் இணைய போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்ட போது அதிமுக எங்களுக்கு நிரந்தர எதிரியும் அல்ல; நிரந்தர நண்பனும் அல்ல என்று கூறினார்.
இதனால் அவர் அதிமுக-வில் இணைய போவதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யின் தலைமையில் உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அதிமுக-வின் நிரந்தர எதிரியான திமுக-வை எதிர்த்து வருவதால், இ.பி.எஸ் தவெக-விற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் எந்த பதிலும் கூறாமல் இருப்பது அவர் எதிர்காலத்தில் அதிமுக-உடன் கூட்டணி அமைப்பார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
அதிமுக-வுடன் தேமுதிக, மதிமுக, தவெக போன்ற கட்சிகள் இடம் பெறுமா என்பது சட்டமன்ற தேர்தலில் தான் தெரியவரும். அதிமுக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி, வரவிருக்கும் தேர்தலில் திமுக-வுக்கு கடுமையான சவாலாக அமையுமா என்பது அரசியல் ஆர்வலர்களின் கேள்விக்குறியாக உள்ளது.