நகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம்! தமிழக அரசு வழங்கிய ஒப்புதல்!

Photo of author

By Sakthi

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியீடு இருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதாவது தனியார் பொதுத்துறை பங்களிப்புடன் திருமங்கலம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2019 ஆம் வருடம் மே மாதம் தொடங்கப்பட்டது.

அதேபோல காஞ்சிபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தருமபுரி, நாமக்கல், திண்டிவனம், திருவண்ணாமலை, உள்ளிட்ட 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் அறிவிப்பிலும் ஒரு சில நகரங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டம் இடம் பெற்று இருக்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கு போதுமான நிலம் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஆகவே அதற்கான உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியை பெறுவதற்கான கருத்துரு பெறப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் செய்தனர். இது குறித்து குழுவின் கூட்டத்தில் அவை முன்வைக்கப்பட்டன. கொள்கை அளவில் 50 சதவீதம் தொகையை வழங்குவதற்கு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

நகராட்சிகளால் தொகையை பங்களிப்பு செய்ய இயலவில்லை என்பதால் மீதமிருக்கும் தொகையை டுவிட்கோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில், உள்ளிட்ட 13 நகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க 424.56 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது .இதற்கான திட்ட அறிக்கையை அந்த உள்ளாட்சி அமைப்புகள் தாக்கல் செய்து இருக்கின்றன.

ஆகவே பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை நிதி உதவியுடன் வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவருடைய கோரிக்கையை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து ஏற்று அதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.