நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருந்தால் தமிழகம் முழுவதும் இதன் வசதி கொண்டு வரப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கும்போது, தமிழ்நாடு முழுவதுமுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதமடையாமல் பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
நியாயவிலைக் கடைகளில் அரிசி வாங்க வருகைதரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில் அதற்கு பதிலளித்த அமைச்சர், சில பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
வயல்வெளியில் வேலை செய்யும் மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கருவி மூலமாக பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி.
தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாக பொருட்கள் வாங்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றோம். அந்த ஏற்பாடுகள் முழுமையடைந்த பிறகு பொது மக்களுக்கு அது நற்பலன்களை தரும் விதத்தில் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் கண் கருவிழி கருவி மூலமாக பொருட்களை வழங்குவதற்கு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.