யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

0
110

பண பரிமாற்றம் அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்து வருகின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் பண பரிமாற்றம் செய்ய யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை புதிய நேரம் வரவுகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நேரம் வரம்புகளின் மூலம் பண பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. போன் பே, கூகுள் பே, பேடிஎம், போன்ற யுபிஐ பயன்படுத்தும் பயனாளர்களின் வசதிக்காக புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி எங்கு வேண்டுமானாலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முழு செயல்முறையும் 15 வினாடிகளில் நிறைவடையும்.

முன்பு 90 வினாடிகள் காத்திருக்கும் சூழல் இருந்த நிலையில் தற்போது 45 முதல் 60 வினாடிகளுக்குள்ளேயே இதனை சரிபார்த்துக் கொள்ளலாம். நெட்வொர்க் கோளாறு போன்ற காரணங்களால் யுபிஐ சிஸ்டத்தை அடையாத பரிவர்த்தனைகள் தானாகவே தோல்வி அடைந்ததாக குறிக்கப்படும். இது நேரத்தை சேமிக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ கட்டண அனுபவம் இனி வேகமாக இருக்க. இந்த புதிய நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலவச செல்போன் கொடுத்தீங்களா; அதிமுக ஆட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் கே. என் நேரு!
Next articleஅஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!