புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

Photo of author

By Sakthi

இங்கிலாந்திலிருந்து பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கின்ற நிலையில், உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கின்றார்.

உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. வழக்கமாக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள், போன்ற பொதுவான இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்த நிலையில், தமிழ்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், இங்கிலாந்திலிருந்து வந்த 20 நபர்களுக்கு புதிய வகையிலான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதிய வைரஸ் வருவதை தடுப்பதற்காக மதிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார்.

குளிர்காலத்தில் புத்தாண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் அதை கட்டுப்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்து மாநில அரசுகளுக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில், அந்தந்த பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலைகள் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துக் கொள்ளலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கின்றது.