நோய் தொற்றுக்கு தாவர தடுப்பூசி கண்டுபிடிப்பு! கனடாவில் புதிய அசத்தல் முயற்சி!

0
114

கனடா நாட்டில் மெடிகாகோ என்ற பெயரில் உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுடைய ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை அடிப்படையாக வைத்து நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயல்பட அவற்றுடன் ஏ.எஸ்.03, என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை 85 மையங்களில் 24,141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் சோதனை நடத்தப்பட்டது. 165 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவருக்கும் தீவிரமான நோய் தொற்று பரவல் ஏற்படவில்லை.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி 5 வகை உருமாறிய நோய் தொற்றுக்கு எதிராக 69.5 சதவீத செயல்திறன் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அறிகுறிகளுடன் கூடிய நோய்களுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான நோய் தொற்றுக்கு எதிராக 78.8% கடுமையான நோய் தொற்றுக்கு எதிராக 74 சதவீதமும் செயல்திறன் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தடுப்பூசி தொடர்பான ஆய்வு தகவல்கள் நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப் மெடிசின் பத்திரிக்கையில் வெளியாகியிருக்கின்றன.

Previous articleகாஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்! உஷார் நிலையில் இந்திய ராணுவம்!
Next articleஅதிர்ச்சி! சென்னையில் 1000 ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!