ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள்! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு! 

0
156
Arjun Ram Maghwal
Arjun Ram Maghwal
ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள்! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு!
ஜூலை மாதம் 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.
தற்பொழுது மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் கடந்த 2023ம் ஆண்டு  டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது “மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த மூன்று புதிய சட்டங்களும் இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இயற்றப்பட்டுள்ளது. இந்த மூன்று புதிய சட்டங்களுக்கும் அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும்” என்று கூறினார்.