உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

Photo of author

By Sakthi

வங்கக் கடல் பகுதியில் இன்றைய தினம் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10ம் தேதி அதாவது நாளை தினம் மற்றும் 11ம் தேதி ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அநேக இடங்களில் இதமான வருடலில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆய்வு மையத்தால் வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன அந்த விதத்தில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும், மிக கனமழை அறிவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும்.

அதனடிப்படையில் நாளை பெரம்பலூர், கடலூர், அரியலூர் ,கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்கள் அதோடு புதுச்சேரிக்கு ரெட் அலார்ட் மறறும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சென்னை, சிவகங்கை, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல நாளை மறுதினம் விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.

ரெட் அலாட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் முதல் 25செ.மீ வரை அதிவேக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.