உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

Photo of author

By Sakthi

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்ற கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட இருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்து இருக்கின்றன.

இதுவரையில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

அதோடு கடலூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.