உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கன மழை பெய்ய வாய்ப்பு!

0
155

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற ஒரு மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வடமேற்கு மற்றும் அதனை உறுதி இருக்கின்ற வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா அருகில் கரையை கடக்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை இருந்தாலும் வெப்பச்சலனம் காரணமாக, மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உதவிபுரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதிறக்கப்படும் டாஸ்மாக்! மகிழ்ச்சியில் குடிமகன்கள்!
Next articleதிமிங்கலத்தின் வாந்தி இவ்வளவு விலையா? என்ன ஒரு அதிசயம்!