டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்!

Photo of author

By Hasini

டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்!

காதலுக்கு வயது எப்போதும் தடை இல்லை என்பது போல தற்போது ஒரு ஜோடி இணை சேர்ந்துள்ளது. அதுவும் 57 வயது வித்தியாசத்தில் அந்த ஜோடி காதலிக்க தொடங்கி உள்ளது. மேலும் இந்த காதல் உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயது பெண் 77 வயதான வாலிபரும் காதல் செய்து வருகின்றனர். 18 வயதான ஜோ மியான்மர் நாட்டில் வசித்து வருகிறார்.

அவர் ஒரு மாணவி அவரது 77 வயதான காதலன் டேவிட் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு இசை அமைப்பாளராக உள்ளார். அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த இரண்டு பேரும் காதலித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஆயிரக்கணக்கான மைல் தூரங்களை கடந்து இருந்தாலும், வயது இடைவெளி பல வருடங்கள் அப்பாற்பட்டு இருந்தாலும், அவர்களது காதலுக்கு எந்தவித தடையும் இல்லை என்றும், நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் இருவரும் டேட்டிங் தளத்தின் மூலம் அறிமுகமாகி சேர்ந்துள்ளனர். தற்போதெல்லாம் ஒவ்வொன்றுக்கும் புதிதாக ஒரு தளத்தை உருவாக்கி, அதன் மூலம் சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர். அப்படி ஒரு தளத்தில் தான் இவ்விருவரும் பழக ஆரம்பித்துள்ளனர். 18 மாதங்களுக்கு முன்பு ஜோ அவருக்கு ஒரு வழிகாட்டியை தேடிக்கொண்டிருந்தார்.

மேலும் அவளது படிப்பிற்கு உதவி செய்யும்படியும் அந்த வழிகாட்டியை தேடிய நிலையில் கடைசியில் டேவிட்டை கண்டுபிடித்துள்ளார். இசை அமைப்பாளரான டேவிட்டும் காதலிக்கும் மனநிலையுடன் எப்போதாவது இந்த தளத்திற்கு வருவாராம். அப்போது இவ்விருவரும் பேசி பழக ஆரம்பித்துள்ளனர். மேலும் டேவிட் தன்னை ஒருபோதும் வயதானவராக கருதுவது இல்லை என்றும், நான் எப்போதும் இளமையாகவே இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

இந்த தளத்தின் மூலம் கண்டுபிடித்த காதலன் டேவிட் பற்றி ஜோ ஒரு நேரலையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பரம் தங்களை காதலன் மற்றும் காதலி என்று அழைப்பதை தவிர்ப்பதாகவும் டேவிட் கூறுகிறார். இவர் இவ்விருவரின் அறிமுகம் உண்மையான நண்பர்களாகவும், உற்ற துணையாகவும் இருப்பதாகவும் இருவருமே தெரிவித்துள்ளனர்.

மியான்மர் மற்றும் கோவிட் உள் நாட்டுச் சூழ்நிலை காரணமாக இருவரும் தற்போது விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜோவின் வழிகாட்டியாகவும், வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், ஜோ வின் பாஸ்போர்ட் தயாரானவுடன் டேவிட்டை சந்திக்க அவர் இங்கிலாந்து வருவதாகவும் டேவிட் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.