புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!!

Photo of author

By Sakthi

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!!
புதிய பாராளுமன்றம் கட்டிடத்தின் திறக்கப்படுவதை அடுத்து 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த 75 ரூபாய் நாணயத்தின் வடிவம் அதில் என்னென்ன குறிப்படப்பட்டுள்ளது என்பதை பற்றியும் அறிவித்துள்ளது.
புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அசோகா சின்னமும், அந்த அசோகா சின்னத்திற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது.
இந்த சின்னத்தின் இடப்புறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும், வலது புறத்தித் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெறுகின்றது. இதனுடன் சேர்த்து இந்திய ரூபாயின் சின்னமும், 75 என்ற எண் ரூபாய் மதிப்பை குறிக்கும் விதமாக அசோகா சின்னத்தின் கீழ் இடம் பெறுகிறது.
நாணயத்தின் மறுபக்கம் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம் பெறுகிறது. அதில் சன்சத் சங்குல் என்ற வார்த்தை தேவனகிரியிலும், பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் இடம்பெறுகின்றது.
புதிய 75 ரூபாய் நாணயம் வட்ட வடிவத்தில் 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கும். நாணயத்தைச் சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் உள்ளது. புதிய 75 ரூபாய் நாணயம் 35 கிராம் எடை கொண்டது. இந்த புதிய 75 ரூபாய் நாணயம் ஃபோர் பார்ட்(Four Part) அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் ஜின்க் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மே 28ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக இருக்கும் 25 கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்தும் 19 கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளது.