
BJP: பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவரை அந்த பதவியிலிருந்து நீக்கய பின்பு நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்ட போதிலும், அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறாததால், பாஜகவின் விவகாரங்களிலிருந்து அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார்.
இதனால் விரக்தியடைந்த அவர் புதிய கட்சி தொடங்க போவதாகவும் தகவல் வந்தது. இது குறித்து அவரிடம் இரண்டு முறை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த இரண்டு முறையும் பதிலளித்த அவர், கட்சி ஆரம்பிக்கும் போது சொல்கிறேன். அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் நீங்கள் தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்க வேண்டுமென்று கூறினார். கட்சி ஆரம்பிக்க வில்லையென்றால் அதனை வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்.
ஆனால் அண்ணாமலை ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை. அதனால் இவரின் இந்த பதில் கட்சி துவங்குவதற்கான முதற்கட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு கூறியிருக்கும் அறிவுரை இதற்கு எதிர்மாறாக உள்ளது. திருநெல்வேலியில் உள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அண்ணாமலை பெயரில் நற்பணி மன்ற அமைப்பை ஆரம்பித்து, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்த அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றும், இது போன்ற செயற்பாடுகளை தவிர்த்து விட்டு, உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்க்காக உழையுங்கள் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தனி கட்சி ஆரம்பிப்பதோ, பாஜகவிலிருந்து விலகுவதோ, இல்லை இது போன்ற அமைப்புகளிளோ அவருக்கு உடன்பாடு இல்லையென்பது நன்றாக தெரிகிறது என்றும் சொல்லப்படுகிறது.