PT TMMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலும், தேர்தல் களமும் ஆட்டம் காண தொடங்கியுள்ளது. கூட்டணி வியூகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுகவும், பாஜகவும் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அனைத்தையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக புதிதாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.
இக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளதால், அடுத்ததாக தேமுதிக, பாமக கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. தமமுகவின் தலைவர் ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வசிக்கும் திருநெல்வேலி தொகுதிக்கு பதிலாக சென்னையில் ஒரு தொகுதியை கொடுத்து சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு துரோகம் இழைத்ததாக அதிமுக மேல் குற்றம் சாட்டினார். அதனால் இந்த சமயம் ஜான் பாண்டியன் கட்சி திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் புதிய தமிழக கட்சி திமுகவை வலுவாக எதிர்த்து வருவதால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

