தமிழக அரசியல் களத்தில், கூட்டணிகள் எப்போது உருவாகின்றன, எப்போது கலைகின்றன என்பதில் எப்போழுதும் ஆர்வம் குறையாது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க மற்றும் த.வெ.க இணைந்து செயல்படப்போகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார். விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறிர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இன்னும் அதை பற்றி யோசனை செய்யவில்லை. அ.ம.மு.க இன்று வரை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறோம். உறுதியாக வெற்றி பெரும் கட்சியிலேயே கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று கூறினார்.
த.வெ.க உடனான கூட்டணி பேச்சுகள் நடந்தன என்பது உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த முடியும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். அரசியல் கூட்டணிகள் என்பது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். வெறும் பதவி, அதிகாரம் என்ற நோக்கில் செயல்பட கூடாது. எங்கள் கட்சி எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும்.

எந்த கூட்டணியில் நாங்கள் இணைந்தாலும், அது மக்களின் நலனையும், எதிர்கால வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்றும், மக்கள் விருப்பமே இறுதியில் தீர்மானிக்கும் சக்தி என்றும் தினகரன் வலியுறுத்தினார். இவரின் இந்த விளக்கம் அ.ம.மு.க –த.வெ.க கூட்டணி குறித்து நிலவும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும், வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு அ.ம.மு.க பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை தங்களின் கூட்டணித் திட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், டி.டி.வி. தினகரனின் இந்த விளக்கம் அரசியலில் மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேசமயம், தேர்தலுக்கு முன்பு இன்னும் பல்வேறு கட்சிகளிடையே கூட்டணி மாற்றங்கள் நிகழ அதிகளவு வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.