உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?

Photo of author

By Hasini

உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மூலமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அதிமுகவில் இனி அந்தந்த தலைவர்கள் பொறுப்பிலேயே இனி ஆட்சி நடத்தவும் , அதற்கென இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் அதுவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் நடைபெறும் என்று நேற்று ஒரு அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டது.

மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதன் காரணமாக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதன் காரணமாக ஒற்றை தலைமை என்ற கோஷம் அந்த கட்சிக்குள் பலமாக எதிரொலித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி அதிமுக இனி எப்போதுமே தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ்தான் இயங்கும் என்பதை உறுதி செய்தது. மேலும் இது தொடர்பாக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்ட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திட்டங்களின்படி அதிமுகவில் இனி எப்போதுமே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிப்பு ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதிமுகவின் இந்த பதவிகளுக்கான தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த தேர்தல் இந்த மாதம் ஏழாம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு  இன்று மனுதாக்கல் செய்ய தொடங்கப்பட்டது. ஆனால் மதியம் 12 மணி வரை யாருமே மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தேர்தலுக்கு முன் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் பல மீறப்பட்டுள்ளதாகவும், பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.