டாஸ்மாக்கில் வரப்போகும் புதிய விதிமுறைகள்!! இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் தான்!!

Photo of author

By Sakthi

மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய  டாஸ்மாக் துறையை  நடத்தி  வருகிறது.அதன் கீழ் 4829 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் வருமானம் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் இந்த வருமானம் 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும். மது விற்பனையை பொறுத்த வரையில் 180 மில்லி பாட்டில் (குவாட்டர் ) 65 சதவீதமும்,360 மில்லி பாட்டில் (ஆப்) 25 சதவீதம், 750 மில்லி பாட்டில்கள் 25 சதவீதம் விற்பனை ஆவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மது பிரியர்கள் மது பானங்களை வாங்கிக் கொண்டு வனப்பகுதிகளுக்கு சென்று, மது அறிந்திய பின் அப்பாட்டில்களை அங்கேயே போட்டு விடுவதால்  வனவிலங்குகளுக்கு காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள்  நீண்ட நாட்களாகவே இருக்கிறது, இது தொடர்பான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கு முடிவு கட்டும்  வகையில் முதலாவதாக 2022  ஆம் ஆண்டு மே மாதம்  15 தேதி பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் வசூலித்து பாட்டிலை திரும்ப பெறும் போது மீண்டும் 10ரூபாய் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது .அந்த வகையில்  நீலகிரி மாவட்டம் ஊட்டியில், செயல்படும் டாஸ்மாக்கில் மதுபாட்டிலை விற்பனை செய்யும் முன் அப்பாட்டிலை திரும்ப பெறுவதற்காக 10ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ரூ 10 கூடுதல் கட்டணத்தில் 29 லட்சத்து 31 ஆயிரம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது .

அதிகபட்சமாக 18 லட்சத்து 50 ஆயிரம் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 63 சதவீத பாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக பெரம்பலூர் ,நீலகிரி , கோவை , திருவாரூர், நாகை, தேனி,தர்மபுரி , கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இம்முறை   செயல்படுத்தப்பட்டது.