அதிகரித்து வரும் கள்ளநோட்டுக்களின் எதிரொலி! அதிரடி மாற்றங்களுடன் வெளி வருகிறது புதிய 500 ரூபாய் நோட்டு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமிருந்ததால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

ஆகவே கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு அவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.

அப்படி அவர் செய்த ஒரு மிகப்பெரிய மாற்றம் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பு.

அப்படி அறிவித்தபோது நாட்டு மக்கள் அனைவரும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். ஆனாலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இதனை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் எத்தனை முறை மாற்றங்களை கொண்டு வந்தாலும் அதனை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடுவது அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வெளிவந்திருக்கின்றன. கடந்த நிதியாண்டில் 2,08,625 கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், தற்போதைய நிதியாண்டில் இதுவரையில் 2,30,971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது சென்ற ஆண்டை விட அதிகமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து இதனை ஒழிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கப்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே கள்ளநோட்டுகள் தயாரிக்கபடாமலிருக்கும் விதத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கி தயாராகிவருகிறது.

இதற்காக அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனத்தின் சிறந்த பாதுகாப்புடன் கூடிய காகிதங்கள் மற்றும் பயன்படுத்தப்படவிருக்கிறது. இதன் காரணமாக, மிக விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.