டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

Photo of author

By Sakthi

தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது.

1980களின் மத்தியில் கள்ளச்சாராயம் தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சப்பட்டு அப்படி கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் கொத்துக்கொத்தாக மடிய தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் மதுபான கடைகளான டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

பின்பு மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது அதோடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு போதுமான வருமானம் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருப்பதே இந்த டாஸ்மாக் வருமானத்தில் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனாலும் பின்னாளில் இந்த டாஸ்மாக் நிறுவனத்தால் பல குடும்பங்கள் அழிந்து போயினர்.

மது பிரியர்கள் வீட்டிலிருக்கும் நகை, பாத்திரம், உள்ளிட்ட அனைத்தையும் அடகு வைத்து குடிக்க தொடங்கினார்கள் இதன் காரணமாக, தமிழகத்தில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட தொடங்கினார்கள். ஆனால் வருமானம் வருவதால் ஆளுங்கட்சி என்ற இடத்தில் எந்த கட்சி இருந்தாலும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக முதன்முதலாக மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுத்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மதுக்கடைகளை உடனடியாக மூடப்படும் என்ற அறிவிப்பை முதலில் வெளியிட்டவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.இந்த மதுக்கடைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியை தமிழகம் முழுவதும் நடத்தியது.

அதோடு மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 3000ற்கும் மேற்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூடியது பாட்டாளி மக்கள் கட்சி.இந்த நிலையில், புதிதாக டாஸ்மாக் கடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்டிப்பாக பரிசீலனை செய்யும் விதத்தில் மதுபான சில்லரை விற்பனை விதிகளில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அதனை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அனுமதித்தால் அதனை எதிர்த்து 30 நாளில் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யும் விதத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.