டாஸ்மாக் நிறுவனம் குடிமகன்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

0
74

டாஸ்மாக் நிறுவனத்தின் எல்லா மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் அனுப்பி இருக்கின்ற அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளில் இணைப்பில் இருக்கின்ற மது கூடங்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்த மாதம் முதல் புது டெண்டர் கோபப்பட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

அதனடிப்படையில், ஆப்செட் ரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வெளிப்படை டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கான டெண்டரை இந்த மாதம் கோரவேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

புதிய மது கூட ஒப்பந்தங்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன, மதுபானத்தின் மாதாந்திர உரிமக் கட்டணம் அந்த இரண்டு வருடங்களுக்கு நிலையாக இருக்கும். தற்போது இருக்கின்ற டெண்டர் நடைமுறைகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.