மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!

Photo of author

By Pavithra

மருத்துவர்கள் அருகில் செல்லாமலேயே கொரோனச் சிகிச்சை அளிக்கும் புதியக் கருவி?அசத்தும் தமிழ்நாடு!!

Pavithra

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் இந்த வைரஸ் விட்டுவைப்பதில்லை அவர்கள் எவ்வளவு பாதுகாப்பான உடை அணிந்து சிகிச்சை அளித்தாலும் எப்படியாவது ஒன்று அந்த வைரஸ் அவர்களிடம் பரவி விடுகிறது.

இந்த பரவுதலை தடுக்கும் விதத்தில் மருத்துவர்களின் நலன் கருதி சென்னை ஐஐடி-யுடன்சேர்ந்து ஹெலிசன் நிறுவனம் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்து.

இந்தக் கருவியை தொற்று பாதித்தவர்களின் விரலில் பொருத்தினால் மட்டுமே போதுமானது இதில் இருக்கும் ரிமோட் சென்சாரின் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை இதயத்துடிப்பு சுவாசம் போன்ற அளவீடுகளை எடுத்துக்காட்டி விடும்.இந்த அளவீடுகள் சென்சார் மூலமாகவே மருத்துவரின்
செல்போனுக்குகோ அல்லது மருத்துவமனையின் பொது கட்டுப்பாட்டு
அறைக்குகோ சென்று விடும் இதனால் மருத்துவர்கள் தொற்று பாதித்தவரின் அருகில் வராமலேயே அவர்களுக்கு சில சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த கருவி.

தொற்று பாதித்த ஒருவர் இடத்தில் பொருத்தப்பட்ட இந்த கருவியை மற்ற நபருக்கும் பொருத்தலாம்.இந்த கருவினை ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம் என்று இந்த கருவியை கண்டுபிடித்தார் நிறுவனங்கள் கூறியுள்ளது.