மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை புதிய ரயில் சேவை! இன்று முதல் தொடக்கம் இரயில்வே துறை அறிவிப்பு!! 

Photo of author

By Sakthi

மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை புதிய ரயில் சேவை! இன்று முதல் தொடக்கம் இரயில்வே துறை அறிவிப்பு!!
மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை இன்று (ஜூலை19) முதல் புதிய இரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த இரயில் எந்தெந்த இரயில் நிலையங்களில் நின்று செல்லும் எத்தனை மணிக்கு புறப்படும் என்பது தொடர்பான விவரங்களையும் இரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருக்கும் அனைவரும் வியாபாரத்திற்காகவும் இன்னும் சில வேலைகளுக்காகவும் மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும் என்றால் கதவை மாவட்டம் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது இரயில் பிடித்து தான் செல்ல வேண்டும். இதனால் பயண நேரம் அதிகமாகின்றது. செலவும் அதிகமாகின்றது.
இதையடுத்து தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நேரடி இரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் இரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை நேரடி இரயில் சேவை இன்று (ஜூலை19) முதல் இயக்கப்படவுள்ளது. இன்று (ஜூலை19) தொடங்கப்படவுள்ள இந்த சேவையை மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை19) 7.35 மணிக்கு புறப்படும் இந்த இரயில் கோயம்புத்தூர் வழியாக அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் இரயில் மேட்டுப்பாளையத்திற்கு 7.40 மணிக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
வாரத்தில் இரண்டு நாட்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த இரயில் சேவை இயக்கப்படவுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் இந்த இரயில் கோவை வழியாக பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை வந்து பின்னர் அங்கிருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும். அதே போல மறுமார்க்கத்தில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.