தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

Photo of author

By Sakthi

தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

Sakthi

New TVK Membership Application Links are created as TVK party server is frequently down.

TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி பணிகளை தீவிரமாக செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

மேலும்  கட்சியில்  உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க  வேண்டும் அதற்கான பணிகளையும் செய்ய  நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார்  தவெக தலைவர் விஜய். மேலும் கட்சி தொடங்கிய போது உறுப்பினர்கள் சேர்க்கைக்காக செயலி ஒன்றை  அறிமுகம் செய்தார் விஜய். அடுத்த கட்டமாக 2  கோடி உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயித்தது இருந்தது.

மேலும் டிசம்பர் மாதம் முதல் விஜய் மண்டல வாரியாக வருகை புரிவார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.  எனவே உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதிலிருந்து பல லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அதில் இணைந்து வந்தனர். மேலும் இந்த உறுப்பினர் செயலில்  மீது பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இந்த செயலியின் சர்வே அடிக்கடி    முடங்கி வருவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

அந்த குறையை போக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் எளிய முறையில் உறுப்பினராக சேர வாட்ஸ்அப், டெலிகிராம், செயலி என அனைத்து லிங்குகளும் தவெக நிர்வாகம் வழங்கியுள்ளது.அதாவது வாட்ஸ்அப் வழியாக கட்சியில் சேர https://bit.ly/tvkhq , டெலிகிராம் வழியாக சேர https://t.me/tvkvijaybot
முதலிய லிங்குகளை பயன் படுத்த வேண்டும் இது மட்டுமல்லாமல்,                      இந்த 09444-00-5555 நம்பருக்கு வாட்ஸ்அப் வழியாக மெசேஜ்  செய்வதாலும் தவெக கட்சியில் சேரலாம்.