இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

0
256
#image_title

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய சீருடையை அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனியான சீருடையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய கிட் ஸ்பான்ஸரான அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை வடிவமைத்து உள்ளது. இந்திய அணி இந்தாண்டு ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி, உலகக் கோப்பை போட்டி மற்றும் பல சர்வதேச தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில் இந்திய அணிக்கான புதிய சீருடை ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.

 

Previous articleதேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?
Next articleபிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!