எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!? 

0
37
#image_title
எல்.சி.யு போல உருவாக இருக்கும் புதிய யூனிவர்ஸ்!!! பிரபல இயக்குநரின் திட்டம் எடுபடுமா!!?
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் எல்.சி.யூ போல புதிய யூனிவர்ஸை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் உருவாக்க இருக்கும் யூனிவர்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்  அவர்கள் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் தற்பொழுது நடிகர் சியின் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் எல்சியு போலவே புதிய யுனிவர்ஸ் உருவாக்கும் திட்டம் இருப்பதாக கூறியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நடிகர் கார்த்தி அவர்களை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்த விக்ரம் படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கினார்.
கைதி, விக்ரம் இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு இயக்குநர் லேகேஷ் கனகராஜ் அவர்கள் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். அதற்கு காரணம் இவர் கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தை இணைத்து எடுத்தது தான்.
விக்ரம் திரைப்படத்தை கைதி திரைப்படத்தோடு கனெக்ட் செய்து எடுத்தில் இருந்து எல்.சி.யூ அதாவது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட் ரசிகர்கள் மத்தியில் வரைலாகத் தொடங்கியது. இதையடுத்து தற்பொழுது நடிகர். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படமும் எல்.சி.யூக்குள் வருமா என்ற குழப்பத்தில் எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் எல்சியு போலவே ஒரு யூனிவர்ஸை உருவாக்க திட்டம் உள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் “துருவநட்சத்திரம் திரைப்படம் நாட்டுக்காக தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு வேலை பார்த்து வரும் 10 பேரை பற்றிய கதை. நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தால் துருவநட்சத்திரம் பார்ட் 2 எடுப்பேன். லோகேஷ் கனகராஜ் அவர்களின் எல்.சி.யூ போல நானும் புதிய யூனிவர்ஸ் உருவாக்குவேன்” என்று கூறினார்.