நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் புதிய அப்டேட்!

Photo of author

By Sakthi

தற்போது தமிழகத்தில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.
அவரை வைத்து ஒரு படம் எடுத்து விட்டால் போதும் தாங்கள் நினைத்த இடத்தை அடைந்து விடலாம் என்பது தற்போதுள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

ஆகவே பலரும் அவரை வைத்து படம் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில், இளம் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்தான் பீஸ்ட்.

இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இருந்தாலும் வசூலில் அந்த திரைப்படம் எந்தவித குறையும் வைக்கவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜயின் 67வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

தற்சமயம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் 2வது முறையாக இணையவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வியெழுப்பிய போது அவர் எந்த விதமான உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.