Breaking News

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!!

ஜூன் 2, 2023 By Sakthi
WA f X TG

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!

நடிகர் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைபடத்தை பற்றி இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ப ரஞ்சித் மற்றும் நடிகர் சியான் விக்ரம் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திரிவோது மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் தங்கலான் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக கொண்டு தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தங்கலான் திரைப்படத்திற்காக உடல் தோற்றத்தையும் உடல் எடையையும் குறைத்து  நடித்து வருகிறார். இதையடுத்து நேற்று சென்னையில் நடைபெற்ற மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படம் பற்றி புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தை பற்றி “தங்கலான் படத்தின்  படப்பிடிப்பு ஜூன் மாதம் 15ம் தேதி மீண்டும் தொடங்கி 12 நாள்கள் நடைபெறவுள்ளது. நடிகர் சியான் விக்ரம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்” என்று அவர் கூறினார்.

 

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!!

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!!