பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நியூ அப்டேட்.. அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு நடந்து வரும் சட்ட சபை கூட்டத் தொடரில் நாள்தோறும் புது புது அறிவிப்புகள் வெளிவந்து கொண்ட இருக்கின்றன.அதன் அடிப்படையில் தற்போது மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி அரசால் வெளியிடப்பட்டுள்ளது.அதாவது இந்தியா முழுவதும் 2003 ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது.அப்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகையை வழங்கி வந்தனர்.இதனால் இரு அரசுகளுக்கும் அதிகப்படியான நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு ஓய்வூதிய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்கு மாற்று யோசனையாக தான் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அது புதிய ஓய்வூதிய திட்டமாக மாற்றப்பட்டது.இது கடந்த 2003 ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எனும் அமைப்பு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகையினை வருடத்தின் முடிவில் ஆண்டு அறிக்கையாக மாற்றி ஒரு தொகுப்பாக வெளியிடும்.
மேலும் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்கள் இரண்டும் தற்போது தமிழக அரசால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆணையத்தால் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படுகிறது .இந்த நிலையில் கடந்த 2023-24-ம் ஆண்டிற்கான தொகுப்பு வரும் ஜூலை 1-ம்(1.7.2024) தேதி முதல் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அமைச்சர் தங்கம் தென்னராசு அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட குழு தற்போது ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்திடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.