பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா?

Photo of author

By Hasini

பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா?

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் வெங்கடேஷ். இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அசுரன் படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் கூட நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் இதுவரை அவர் தனது குடும்ப விஷயங்களை எப்போதும் பகிர்ந்து கொண்டதேயில்லை.

மேலும் இவர் நாக சைதன்யாவின் சொந்த தாய் மாமாவும் ஆவார். அவர் தற்போதெல்லாம் அதாவது நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து விஷயம் வெளிவந்த பிறகு அன்பு, காதல், வாழ்க்கை, நம்பிக்கை போன்ற பல விஷயங்களை பற்றி தினமும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு பதிவை மக்களுக்காக பதிவிடுகிறார்.

தற்போது புதிதாக அவர் பதிவிட்டுள்ள தத்துவமான பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தற்போதெல்லாம் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. உன்னை விரும்பியவர்களை எப்போதும் மோசம் செய்யாதே, உன்னை வேண்டும் என நினைப்பவர்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என்று ஒரு போதும் சொல்லாதே, யார் உங்களை அதிகமாக நம்புகிறார்களோ? அவர்களை எப்போதும் மோசம் செய்யாதே, உன்னை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்பவர்களை மறந்து விடாதே என்று பலவற்றை குறிப்பிட்டு உள்ளார்.

நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பற்றி தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டு இருப்பதாக வலைதளங்களில் இந்த கருத்துக்களுக்கு பல சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவர் எதைப் பற்றி சொன்னார் என்றால் என்ன? ஆனால் எல்லோரது வாழ்விலும் இப்படி ஒரு நிலையைக் கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறோம்.

அப்படியே வாழவும் பழகிவிட்டோம். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசிக் கொள்ளவும் நேரம் இருப்பதில்லை, புரிந்துகொள்ளவும் நேரம் இருப்பதில்லை, யாரும் அதற்கு தயாராகவும் இல்லை. அப்படியே வாழ்ந்து விடுகிறோம். அதற்குள்ளாக நம் வாழ்வில் பல சண்டைகள், சச்சரவுகள் என அப்படியே அனைவரது காலமும் போய்விடுகின்றது.

ஆனால் அந்த ஒருவர் அங்கு இல்லாத நேரத்தில் தான், அவரைப் பற்றிய நினைவுகளும் அவர் சொன்ன கருத்துக்களும் நாம் செயல்படுத்தி இருந்தால்  சரியாக இருக்குமோ? என்ற எண்ணங்களும் நமக்குத் தோன்றுகின்றன.