கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!

Photo of author

By Hasini

கொரோனா நிதி வழங்கிய புது மணமக்கள்! வாழ்க பல்லாண்டு!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மக்களின் பொருளாதாரம் முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் பயங்கரமாக பாதித்துள்ளது.

மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பலர் வாழ்வாதாரத்தையே இழந்து வருகின்றனர்.மாநில, மத்திய அரசுகள் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசு பல நிதி நெருக்கடிகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.எனவே முதலைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி இருந்தார்.

அதனையடுத்து பல திரை நட்சத்திரங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதியை முதலமைச்சரிடம் கொடுத்தனர்.எதிர் கட்சியான அ.தி.மு.க. வும் அதன் பங்காக 1 கோடி அறிவித்தது.

இந்நிலையில் நாகை புத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் ஷெரின் ராஜூக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த விக்டர் ராஜ் என்பவரது மகள் சூர்யாவுக்கும் நாகையில் நேற்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு தங்கள் பெற்றோருடன் கையோடு நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.50000 வழங்கினர்.

அதன்பிறகு கலெக்டர் அந்த நிதியை வாங்கிக்கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினார்.