இன்று அம்மாவாசை! கண்திருஷ்டி போக்க அற்புத நாள்! கண்திருஷ்டி நீங்க!

Photo of author

By Pavithra

இன்று அம்மாவாசை! கண்திருஷ்டி போக்க அற்புத நாள்! கண்திருஷ்டி நீங்க

கல்லடி பட்டாலும் கண்னடி படக்கூடாது என்று பெரியோர்கள் அடிக்கடி கூறி கேட்டிருப்போம்.பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் திருஷ்டியால் அதிகம் அவதிக்கு உள்ளாவார்கள்.
இந்த கண்திருஷ்டியை கழிக்க ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாள் மிக மிக உகந்த நாளாகும்.அதிலும் அமாவாசை நாளன்று கண் திருஷ்டி கழித்தால் நல்ல பலன்களை தரும்.குழந்தை இருக்கும் வீடு முதல் பெரியோர்கள் வரை எவ்வாறு கண் திருஷ்டி கழிப்பது என்பதனை பற்றி இதழில் காண்போம்.

குழந்தைகளுக்கு :

பிறந்த குழந்தைகளாக இருப்பின் ஆலம் கரைத்து அதில் சிறிதளவு அடுப்புக்கரி,வரமிளகாய் போட்டு வெளியில் இருந்து குழந்தையைப் பார்க்க வருபவர்களின் கண்களில் படுமாறு வைத்து விட வேண்டும்.இவ்வாறு செய்தால் பிறந்த குழந்தைகளின் மீது ஏற்படும் கண் திருஷ்டி நீங்கும்.

நடக்கும் குழந்தைகள் முதல் 10 வயது குழந்தைகள் வரை :

அமாவாசை நாளன்று மாலை நேரத்தில் ஒருவில்லை கற்பூரத்தை எடுத்து மூன்று முறை தலையை சுற்றி அந்த இடத்தில் கற்பூரத்தை வைத்து தீயில் கொளுத்தி விட வேண்டும்.

10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர் வரை:

குறிப்பிட்ட ஒரு நபரின் கண்திருஷ்டி பட்டால் அவர்களின் காலடி மண்ணை எடுத்து வரமிளகாய்,உப்பு,கடுகு ஆகியவற்றுடன் சேர்த்து மூன்று முறை சுற்றிவிட்டு,எரியும் அடுப்பில் போட்டு விட வேண்டும்.

பொதுவாக திருஷ்டி கழிக்க வேண்டுமென்றால் சிறிதளவு கல்உப்பு எடுத்து இடமிருந்து வலமாக,வலமிருந்து இடமாக மூன்று முறை சுத்திவிட்டு மேலிருந்து கீழாக மட்டும் சுற்றி அந்த உப்புகல்லை எரியும் அடுப்பில் போட்டு விட வேண்டும்.

எலுமிச்சை பழத்தை நான்காக அறுத்து அதில் குங்குமம் தடவி இதேபோன்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்றுமுறை சுற்றிவிட்டு அந்த இடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு பின்பு அந்த நான்கு துண்டுகளையும் வலது கையை இடது புறமாக கொண்டு சென்று, இடது கையை வலப்புறமாக கொண்டு சென்றும் தூக்கி எறிய வேண்டும்.