திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

Photo of author

By Pavithra

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று அனைத்து கிரகங்களும் அவர்களின் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறது.ஒவ்வொரு ராசிக்கு உண்டான தெய்வங்கள் அவர்களுக்கு உண்டான ராசியிலேயே சஞ்சாரம் செய்யும் இந்த நேரத்தில் மங்களகரமான சுப முகூர்த்தம் ஏற்பட போவதாகவும் இந்த வேளையில் இறை வழிபாடு செய்தால் மிகவும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது.

இன்று தனகரனான குரு பகவான் தனுசு ராசியிலும்,செவ்வாய் பகவான் மேஷ ராசியிலும்,சனி பகவான் மகர ராசியிலும்,சந்திர பகவான் கடக ராசியிலும்
புதன் பகவான் கன்னி ராசியிலும்,என அந்தந்த ராசிக்குரிய பகவான் அந்தந்த ராசியிலேயே சஞ்சரிக்கின்றன.இதிலும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் சுக்கிர பகவானை தவிர மற்ற 6 கிரகங்களும் தங்களது சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கவில்லை என்றாலும் சனி பகவானின் பார்வையைப் பெறுவதால் வலிமை மிக்கவராக அமருகிறார்.

இன்று மதியம் 12 மணி முதல் 1 30 மணி மணி வரை தனுசு லக்னம் அமைவதால் இந்த வேளையில்,அதிலும் குறிப்பாக 1.09மணிக்கு அந்த விசேஷமான சுபமுகூர்த்தம் அமைய இருக்கின்றது.

இந்த நேரத்தில் நாம் இறை வழிபாடு செய்தால் கிடைக்கும் நன்மைகள்!

இந்த நேரத்தில்,உங்கள் வீடுகளில் விளக்கேற்றி,சிவ வழிபாடும் நாராயண வழிபாடும் செய்து,சிவபுராணம்,
கோளறுபதிகம்,போன்ற இறை நாமத்தை பாடி வழிபட்டால்
கீழே உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

*கடன் பிரச்சனை தீரும்,

*ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து சிக்கல்களும் தீரும்

*வீட்டில் எதிரிகளால் அடிக்கடி தொல்லை ஏற்படும் வந்தால் இன்று இந்த நேரத்தில் வழிபாடு செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிட்டும்.

*குருவருளும் திருவருளும் விரைவில் கிட்டும்.

*காரிய தடைகள் அகலும்.

10.45 மணி முதல் 12 மணி வரையில் விருச்சிக இலக்கணத்திலும் இந்த இறை வழிபாடு செய்யலாம்.