என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது! அதிரடியில் இறங்கிய ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

அதிமுகவின் பொதுக்குழு குறித்து தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்திருக்கின்ற நிலையில், பன்னீர்செல்வம் அது தொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதாவது அதிமுகவின் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட இயலாத நிலையில், இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

அவர் தாக்குதல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர் மோகன், உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நாகலின்றி மேல்முறையீட்டு மனுவை பட்டிலிடும்படி எடப்பாடி பழனிச்சாமி கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அந்த கூடுதல் மனு எதிர்வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் இந்த வழக்கில் பன்னீர்செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு வழக்கில் தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்ட பிறகு தான் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என ஒரு கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி கூடுதலான மனுவுடன் பன்னீர்செல்வத்தின் கேவியட் மனுவும், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று எடப்பாடி பழனிச்சாமி மனு ஏற்கப்படும் பட்சத்தில் அடுத்த ஓரிரு தினங்களில் அவருடைய பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.