தோனிக்கு அடுத்து சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!! ரசிகர்கள் வாழ்த்து!!

0
98
Next to Dhoni, Ben Stokes became the record holder!! Greetings fans!!

தோனிக்கு அடுத்து சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!! ரசிகர்கள் வாழ்த்து!!

கிரிக்கெட்டில் மிக சிறந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் ஒருவர் ஆவார். 32 வயதான இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பதவி ஏற்றார்.

இவர் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகள் விளையாடி அதில் 6021 ரன்களை குவித்துள்ளார். மேலும், இதில் 13 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களை அடித்துள்ளார்.

இவர் கேப்டனாக விளையாடிய பதினேழு போட்டிகளில் மொத்தம் பன்னிரெண்டு போட்டிகளில் எதிர் அணியை வென்றுள்ளார். இந்திய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி மொத்தமாக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதுவரை 250 ரன்களுக்கு அதிகமான ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் சேஸிங் செய்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இது போலவே நான்கு முறை தோனி தலைமையிலான அணி வெற்றி வாகையை சூடியுள்ளது.

ஆஷஸ் போட்டியின் மூன்றாவது டெஸ்ட்டை ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வென்றுள்ளது. எனவே, ஐந்து முறை 250 ரன்களுக்கு அதிகமான ரன்களை சேஸிங் செய்து வெற்றி அடைந்துள்ளது.

இதனால் இதுவரை இதில் இருந்த தோனியின் சாதனையை முறியடித்து பென் ஸ்டோக்ஸ் முன்னே வந்துள்ளார். இவரின் இந்த சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், இந்த சாதனைக்கு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பென் ஸ்டோக்ஸ்-ற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இதன் நான்காவது ஆஷஸ் போட்டியானது ஜூலை மாதம் பத்தொன்பதாம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.