உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இதை வைத்தால் போதும்…!! கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விடும்…!!

0
511
Nilai Vasal vastu

Nilai Vasal vastu: நம் வீட்டில் பெரியவர்கள் இதை கூறுவார்கள் கல்லடி பட்டாலும் பரவாயில்லை, ஆனால் கண்ணடி படாக்கூடாது என்று கூறுவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் ஒருவர் நன்றாக இருப்பார் திடீரென்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படும். உடனே நம் வீட்டில் உள்ளவர்கள் கூறுவர்கள் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது.

ஒருசிலருக்கு திடீரென்று மனகவலை ஏற்படும், தேவையில்லாமல் பண இழப்பு, மருத்துவமனை செலவு போன்றவை ஏற்படும். மேலும் ஒரு சில நேரங்களில் நமக்கு வேலை முடிந்த பிறகு ஏன் தான் வீட்டிற்கு வருகிறாேம் என்று தோன்றும். இவ்வாறு நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் தேவையில்லாத குழப்பங்களும், கவலைகளும் தோன்றிக்கொண்டு இருக்கும்.

இதனை தடுக்கும் விதமாக நம் வீட்டின் நிலை வாசல் படியில் ஒரு சில பொருட்களை வைத்தால் நம் வீட்டில் ஏற்பட்ட கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் என்று அனைத்தும் விலகி கடவுளின் ஆசி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

நிலை வாசல் படியில் வைக்க வேண்டிய பொருட்கள்

நிலை வாசல் என்பது ஒரு வீட்டிற்கு முக்கியமான ஒன்றாகும். நம் வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவர் நம் வீ்ட்டு நிலை வாசல் படியை தாண்டி தான் வரவேண்டும். அப்படி இருக்கும் போது நம் வீட்டிற்குள் வரும் நல்ல ஆற்றலும், எதிர்மறை ஆற்றலும் நிலைவாசல் படியை தாண்டி தான் வர வேண்டும்.

எனவே நிலை வாசல் படி என்பது ஒரு வீட்டின் நிம்மதியை குறிக்கும் இடமாகும். எனவே நிலை வாசல் படியில் குறிப்பிட்ட பொருட்களை வைப்பதால் நேர்மறையான ஆற்றல் கிடைக்கும். அதனால் வீட்டில் தெய்வ கடாக்ஷம் இருக்கும்.

ஒருசிலர் வீடுகளில் ஏதாவது விஷேசமான காலங்களில் தான் நிலை வாசல் படியை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைப்பார்கள். ஆனால் அவ்வாறு இல்லாமல் வாரத்தில் வெள்ளிக்கிழமை, நிலை வாசல் படியில் எப்போதும் மஞ்சள், குங்கும் இருக்கும் படி பார்த்துகொள்ளுங்கள். நிலை வாசலின் முன் மற்றும் பின் பக்கம் மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

மேலும் தோரணம் கட்ட வேண்டும். வேப்பிலை, மாவிலை, அருகம்புல், அரசஇலை போன்று ஏதாவது ஒரு இலையில் தோரணம் கட்ட வேண்டும்.

மேலும் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் பூஜை அறையில் தூபம் போடும் போது நிலை வாசல் படியில் பத்தி, கற்பூரம் ஏற்றி வழிபடலாம்.

மேலும் ஒரு சிலர் வீடுகளில் நாம் பார்த்திருப்போம், எலுமிச்சை, உப்பு, மிளகாய் வைத்து திருஷ்டிக்கு கட்டியிருப்பார்கள். அவ்வாறு உங்கள் குல தெய்வ கோயிலில் வைத்து வழிபட்டு வந்த எலுமிச்சை பழத்தை கட்டி வழிபடலாம்.

மேலும் கற்றாலையை வேருடன் பறித்து அதனை தலைகீழாக தொங்கவிட்டு கட்டிவிட்டால் வீட்டில் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். கண்திருஷ்டி விலகும்.

மேலும் நாள்தோறும் நிலை வாசல் படியில் விளக்கேற்ற வேண்டும். தினந்தோறும் இல்லை என்றாலும், செவ்வாய், வெள்ளியில் ஏற்ற வேண்டும்.

மேலும் படிக்க: கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!

Previous articleசுவையான தேங்காய் லட்டு சிம்பிளா வீட்டிலேயே செய்யலாம்..!!
Next articleஇவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்டதா கசகசா? ஆனால் மற்ற நாடுகளில் இதற்கு தடை ஏன்?