பதிலளிக்காமல் சென்ற நிர்மல் குமார்.. விஜய் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி!!

0
223
Nirmal Kumar left without replying.. Dissatisfaction with Vijay!!
Nirmal Kumar left without replying.. Dissatisfaction with Vijay!!

TVK: 2 நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் மிக பெரிய துயர சம்பவம் தவெக பிரச்சாரத்தில் நடந்த 41 பேரின் உயிரிழப்பு தான். இது வரை எந்த ஒரு அரசியல் கட்சி பொது கூட்டத்திற்கும் இந்த அளவு உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இது குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த பதிலும் கூறாமல் சென்றார். இறந்தவர்களையும் காண வரவில்லை.

இதனால் விஜய் மீது அரசியல் களத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், ஆறுதலையும், ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தவெகவின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளளோம்.

இந்த சம்பவத்தை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டுமென்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் இது நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் இது தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தவெக நிர்வாகிகளும், தலைவர் விஜய்யும் ஏன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை, விஜய் கரூருக்கு வருவாரா? என்று கேள்வி கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் சென்றார்.

Previous articleகாமெடியில் தொடங்கி இன்று கதாநாயகனாக வலம் வரும் சூப்பர் ஹீரோ!!
Next articleமுழுப்பொறுப்பும் விஜய் என்று சொல்லிவிட முடியாது.. அண்ணாமலையின் பரபரப்பு பேட்டி!!