பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!!

0
207
#image_title
பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!
பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் டெல்லியில் வரும் மே மாதம் 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய திட்டக் குழுவிற்கு மாற்றாக பாஜக கூட்டணி அரசு நிதி ஆயோக் என்ற அமைப்பை கொண்டு வந்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி அவர்களும் துணைத் தலைவராக சுமன் பெரி அவர்களும் உள்ளனர்.
நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் யூனியன் பிரதேச துணைநில கவர்னர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு மே 27ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. மே 27ம் தேதி நடைபெறவுள்ள இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மே 27ம் தேதி நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் தங்கம் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும், 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்ற என்ன செய்ய வேண்டும் போன்ற திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous articleபிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!
Next articleடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!!