தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த விவகாரம் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
135

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவு,ம் அதுவரையில் பள்ளிகள் இயங்காது எனவும், கடந்த 17ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதற்கு கல்வித் துறை சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்தது. அந்த எச்சரிக்கையும் உயர்ந்ததாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதனடிப்படையில், கடந்த 18ஆம் தேதி மாநிலம் முழுவதும் இருக்கின்ற 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை வழங்கியது ஏன் என 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் அனுமதி இன்றி விடுமுறை அறிவித்த விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதிலாக ஏதாவது ஒரு சனிக்கிழமை வேலை நாளாக கொண்டு செயல்படும் என்று பள்ளிகள் விளக்கமளித்துள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்ருக்கிறது.

Previous articleபதினெட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட தனியார்  பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் !
Next articleதேனி மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த கவுமாரியம்மன் ஆனிதிருவிழா!