Cinema News: நடிகர் சல்மான்கானின் முன்னாள் காதலி சோமி அலி நீண்ட நாட்கள் கழித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் சல்மான்கான் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவர் சினிமா துறையில் பாலிவுட் படங்களில் மிக பிரபலம். அந்த அளவுக்கு இப்போது அவர் ஒரு சர்ச்சையில் தொடர்ந்து பிரபலமாகிறார். அது என்னவென்றால் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத சல்மான்கான் வாழ்க்கையில் நிறைய காதலிகள் இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் தான் சோமி அலி. இவர் 1991 முதல் 1999 வரை சல்மான்கானுடன் உறவில் இருந்தார். அதாவது 9 ஆண்டுகள். அந்த 9 ஆண்டுகளில் அவரது செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகினார் என சோமி அலி கூறியுள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் நடந்த கேள்வி பதிலின்போது சல்மான்கான் குறித்து சோமி அலி பேசியுள்ளார்.
அப்போது அவர் சல்மான்கான் ஒரு மூர்க்கமான நபர். அவருடன் காதலில் இருப்பவர்கள் அவரை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஆகிவிடும். பிறகு அவருடன் காதலில் விழுந்த பெண்கள் 7ஆண்டுகளுக்கு மேல் தாக்கு பிடிக்க மாட்டார்கள். அதே போல் சல்மான்கான் யாரையும் ப்ரேக்-அப் செய்யமாட்டார். ஏனென்றால் அவரின் கொடுமை தாங்க முடியாமல் அவர்களே வெளியேறிவிடுவார்கள்.
அப்போது தான் அவரின் உண்மையான முகம் தெரியும். நான் அவருடன் காதலில் இருந்த போது அவருக்கு 8பெண்களுடன் “ஒன் நைட் ஸ்டாண்ட்” என்னும் இரவு உறவு இருந்தது. இதனால் என்னால் அவருடன் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருக்க முடியவில்லை. அதனால் நான் வெளியேறி விட்டேன் என்று கூறி உள்ளார்