வெளியிட்ட அறிவிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

Photo of author

By Sakthi

பிப்ரவரி மாதம் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கபட்டாலும் கூட மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக தேர்வை எழுதலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, முதல்வர் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் பள்ளிகளும், கல்லூரிகளும், பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் செயல்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இருந்தாலும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5 உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தவாறு இணையதளத்திலேயே நடைபெறும் என கூறியிருக்கிறார்.

ஆகவே இணையதளம் தேர்வு நடைபெறும் தினங்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுதலாம், மற்ற தினங்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும். கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கல்லூரிகள் திறப்பு என்பதை மாணவர்கள் இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும், இணையதள தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியும் இருக்காது, அந்தத் தேர்வுகள் முறையாக நடைபெற்று முறையாக முடிவுகள் வெளியாகும், கல்லூரிகளும், முறையாக நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

3வது மொழி எந்த மொழியாக இருந்தாலும் படிப்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

விருப்பம் கொண்ட மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமென்றாலும் படித்துக்கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்து இருக்கின்ற காரணத்தால், எந்த மாநிலத்திற்கும் தவறு ஏற்படுவதாக இருப்பதற்கான வாய்ப்பில்லை.

வடமாநிலங்களில் எந்த மாநிலத்திலாவது நம்முடைய தென்னிந்திய மொழிகளை விருப்பப்பாடமாக வைத்திருக்கிறார்களா? ஏதோ பேச வேண்டும் என்று ஆளுநர் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் இரண்டு மொழி கொள்கை என்பது மாற்ற இயலாத ஒன்று அது தான் செயல்பாட்டில் இருக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.