தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…

0
84

தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…

 

தேர்வு இல்லாமல் மத்திய அரசு நிறுவனத்தில் 50000 முதல் 70000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

மத்திய அரசின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலைக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 50000 ரூபாய் முதல் 70000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

 

மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏ.டி.ஏ அதாவது ஏரோநாட்டிகள் டெவலப்மென்ட் ஏஜென்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய மற்ற தகவல்கள் பின்வருமாறு…

 

பணி நிறுவனம்:

 

வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிறவனத்தின் பெயர் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி ஆகும்.

 

வெளியாகியுள்ள காலிபணியிடங்களின்பெயர்:

 

தற்பொழுது ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் ப்ரோஜகட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

காலிப்பணியடங்கள்…

 

ஏரோநாட்டிகள் டெவலப்மென்ட் ஏஜென்சியில் ப்ரோஜக்ட் இன்ஜினியர் பணிக்கு 53 காலிப் பணியிடங்கள் உள்ளது. அதன்படி ப்ரோஜக்ட் என்ஜினியர் I பணிக்கு 40 பேரும் ப்ரோஜக்ட் என்ஜினியர் II பணிக்கு 9 பேரும், ப்ரோஜக்ட் என்ஜினியர் III பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

கல்வித் தகுதி:

 

ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி வெளியிட்டுள்ள ப்ரோஜக்ட் என்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பி.இ, பி.டெக் பிரிவில் மெக்கானிக்கல் என்ஜினியரிங், இண்டஸ்டிரியல் புரொடக்சன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ராணிக்ஸ் என்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ், எலக்டிர்க் அண்ட் டெலி கம்யூனிகேசன், ஐ.டி, ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

வயது வரம்பு:

 

ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் நிரப்பப்படவுள்ள ப்ரோஜக்ட் என்ஜினியரிங் I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 35 வயதில் இருந்து அதிகபட்சம் 55 வயது உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 

பிரோஜக்ட் இன்ஜினியரிங் II பணிக்கு விண்ணபிக்கும் நபர்கள் 45 வயதுக்கு குறையாமலும், ப்ரோஜக்ட் என்ஜினியரிங் III பணிக்கு விண்ணபிக்கும் நபர்கள் 55 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயது வரம்பு 8.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 

சம்பளம் பற்றிய விவரங்கள்:

 

ப்ரோஜக்ட் என்ஜினியரிங் I பணிக்கு மாதம் 50000 ரூபாயும், ப்ரோஜக்ட் என்ஜினியரிங் II பணிக்கு மாதம் 60000 ரூபாயும், ப்ரோஜக்ட் என்ஜினியரிங் III பணிக்கு மாதம் 70000 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://ada.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

கடைசி தேதி:

 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

இந்த பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. மேலும் நேர்காணல் அடிப்படையில் நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Previous articleஅரசு மருத்துவமனை கழிவறையில் வாலிபர் தற்கொலை… பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…
Next article15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்…