விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

Photo of author

By Janani

விரதம் இல்லை..!! பூஜை இல்லை..!! தினமும் இந்த ஒரு வார்த்தையை குலதெய்வத்தை நினைத்து 3 முறை கூறினால் போதும்..!!

Janani

Updated on:

தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும், அந்த நாள் முழுவதும் வெற்றியை தரக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும். இன்று அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே பண பிரச்சினை தான். அந்த பண பிரச்சனையையும் போக்கி பண வரவை தரக்கூடிய வார்த்தையும் இந்த ஒரு வார்த்தை தான்.

பண பிரச்சினை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான பிரச்சனைகளையும் இந்த ஒரு வார்த்தை போக்கி விடும். அதிகாலை எழுந்ததும் நாம் எந்த பொருளை பார்க்கின்றோமோ அதனைப் பொறுத்துதான் அந்த நாள் முழுவதும் அமையும் என்று கூறுவர். அதே போன்று தான் காலை எழுந்ததும் உங்களது உள்ளங்கையை பார்த்து இந்த ஒரு வார்த்தையை கூறும் பொழுது, அந்த நாள் முழுவதும் உற்சாகமான நாளாக அமையும்.

இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் அனைத்து நாட்களும் செய்யும்பொழுது, வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை இது தேடி தரும். ஒரு சில வீடுகளில் பணத்திற்கு எந்த ஒரு குறைவும் இருக்காது, ஆனால் அந்த வீட்டில் நிம்மதி என்பது இருக்காது. என்னதான் பணம், பொருள் என நம்மிடம் இருந்தாலும், நிம்மதி என்பதும் மிகவும் முக்கியம். அந்த ஒரு மன நிம்மதியையும் இந்த ஒரு வார்த்தையின் மூலம் நாம் பெற முடியும்.

அந்த ஒரு வார்த்தையானது என்னவென்றால் “அம் பகவ”. அம் என்பது ஒரு மங்கல சொல். பகவ என்பது பகவானை குறிக்கும் ஒரு சொல். எனவே இந்த ஒரு வார்த்தையை தினமும் காலையில் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்தவாறு மூன்று முறை கூற வேண்டும். இந்த ஒரு வார்த்தையை கூறும் பொழுது உங்களது குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் குலதெய்வத்தின் அருள் என்பது மிகவும் அவசியம். தினமும் அதிகாலையில் உங்களது குலதெய்வத்தை நினைப்பது மிக மிக சிறப்பு. எனவே தினமும் எழுந்தவுடன் உங்களது உள்ளங்கையை பார்த்து, உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, இந்த ஒரு வார்த்தையை மூன்று முறை கூறும் பொழுது உங்களது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை உங்களால் கண்கூடாக காண முடியும்.

இது ஒரு பரிகாரமும் கிடையாது, பூஜையும் கிடையாது. இது ஒரு சாதாரண செயல்பாடு தான். இதனை முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் தினமும் செய்து வந்தால் உங்களது வாழ்க்கையில் பல வெற்றிகளை காணலாம்.