அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக கடந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு, மதிப்பெண்கள் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக இணையதளத்திலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களில் இணையதள வசதி சரியாக இல்லாத காரணத்தால், கிராமப்புற மாணவர்கள் வகுப்பில் பங்கேற்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் , அரையாண்டு தேர்வு எப்போது நடைபெறும் நேரடி வகுப்பு நடைபெறுமா இல்லையென்றால், இணையதளத்தில் நடத்த படுமா என்ற கேள்விகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்து வந்தது.

இதுகுறித்து இன்று கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பதிலளித்து இருக்கின்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளி தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம் தேவையென்றால் இணையதளம் மூலமாக தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன, ஒரு சில பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் இருக்கும் காரணத்தால் கூடுதல் கழிவறைகள் தேவைப்படுகின்றது. இதற்கு முன்னதாக பள்ளிகள் கட்டப்பட்ட போது பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே கழிவறைகள் கட்டப்பட்டன. ஆனால் சென்ற பத்து வருடங்களாக கட்டப்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களிலும் வளாகத்திலேயே கழிப்பறை வசதிகள் இருந்து வருகின்றன என்று தெரிவித்திருக்கின்றார்.